முருங்கைக்காய் பயன்படுத்தி ருசியான சப்பாத்தி !!

chapati
முருங்கைக்காய் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. அதில் புரோட்டீன், நார்ச்சத்து, ஃபோலேட், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. 'அதனை பயன்படுத்தி எப்படி ருசியான சப்பாத்தி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான அளவு :
முருங்கைக்காய் - 2
கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்
சீரக தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -சுவைக்கேற்ப
ஒமம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
கோதுமை மாவு - 2 கப்
துருவிய இஞ்சி - சிறிதளவு
நறுக்கிய ப.மிளகாய் - 1
மஞ்சள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
முருங்கை இலை -சிறிதளவு
செய்முறை :
முதலில் முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். முருங்கைக்காய்
வெந்ததும் அதனை நன்றாக மசித்து ஒரு பவுலில் வடிகட்டி வைக்கவும்
இப்போது அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள், மிளகாய் தூள், சீரக தூள், ஒமம், நறுக்கிய முருங்கை இலை தேவையான அளவு உப்பு மற்றும் சில சொட்டுக்கள் எண்ணெய் சேர்க்க வேண்டும்
அடுத்து, முருங்கைக்காய் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். பிறகு பவுலை மூடி 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்
வழக்கமான முறையில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும். பிறகு சப்பாத்தி கல்லை கொண்டு வட்ட வடிவில் தேய்க்க வேண்டும்
இப்போது அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த மாவை போட்டு வேகவிட வேண்டும். ஒருபக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் சேர்க்க வேண்டும்
அவ்வளவுதான், இருபுறமும் வெந்ததும் சூடாக பரிமாற வேண்டும். இதனை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.