ருசியான செட்டிநாடு மீன் குழம்பு மசாலா !!
செட்டிநாடு மீன் குழம்பு மசாலா
தேவையானவை:
தனியா தூள்- 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
நல்லெண்ணெயில் மேலே உள்ள பொருள்களை வாசனை வரும்வரை தனித்தனியாக வறுத்து ஆறவிடவும்.
பிறகு இவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
மீன்குழம்பு சமைப்பதற்கு, வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வதக்கி, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு அப்போது, அரைத்த செட்டிநாடு மீன் குழம்பு மசாலாவையும் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் வழக்கம்போல மீன் துண்டுகளைச் சேர்த்து வேக வைக்கவும். சுலபமான செட்டிநாடு மீன் குழம்பு மசாலா ரெடி....நல்ல சுடு சாதத்துடன் பரிமாறவும்.