சுவையான காரத் துவையல் ரெடி
காரத் துவையல்
டிபன் செஞ்சாலே நமக்கு காரச் சட்னி இருந்தால் ரொம்ப பிடிக்கும் இல்லைங்களா..! இப்போ அந்த கார சட்னி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்
வெங்காயம் இரண்டு
தக்காளி இரண்டு
இஞ்சி ஒரு சிறு துண்டு
பூண்டு 2 பல்
புளி சிறிதளவு
காய்ந்த மிளகாய் 4
கொத்துமல்லி கால் கட்டு
என்னை ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை குறுக்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியையும், அப்படியே நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீரில் அலசி அறிந்து கொள்ளவும். வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு உளுத்தம் பருப்பை போட வேண்டும். அது சிவந்தவுடன் இஞ்சி போட்டு வதக்கி பிறகு பூண்டு,, காய்ந்த மிளகாய், புளி போட்டு வதக்க வேண்டும். பிறகு வெங்காயம் போட்டு சிறிது வதங்கிய பின் தக்காளியை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடம் வதங்கியதும் கொத்துமல்லி போட்டு இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைக்க வேண்டும். ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக கெட்டியாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான காரத் துவையல் ரெடி.