சமையலுக்கு டேபிள் சால்டைப் பயன்படுத்தாதிங்க !

சமையலுக்கு டேபிள் சால்டைப் பயன்படுத்தாதிங்க !

டேபிள் சால்ட் 

  • சமையலுக்கு டேபிள் சால்டைப் பயன்படுத்தாமல் கல் உப்பை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் கல் உப்பு சுத்தமாக்கப் படும் பொழுது இரும்புச்சத்து, தாமிரச்சத்து, மாங்கனீஷியச் சத்து, அயோடின் போன்ற வைகளை இழந்து விடுகிறது. டேபிள் சால்ட்டில் மிஞ்சுவது சோடியம் குளோரைடு மட்டும்தான்.
  • வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டுக் காலையில் பிரித்து எடுத்தால் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.
  • இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும் போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
  • வறுவல், சிப்ஸ், அப்பளம் போன்றவற்றைப் பொரித்தவுடன் மூடி விடக் கூடாது. உடனே மூடிவிட்டால் அவை விரைவாக நமத்து விடும். சிறிது நேரம் கழித்து மூடி வைத்தால் அவை மொரமொரப்பாக இருக்கும்.
  • மெதுவடைக்கு வேண்டியவற்றைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற விட்டுப் பின் வடித்து 1 மணி நேரம் கழித்து அரைத்து வடை தட்டினால் எண்ணெய் அதிகம் செலவழியாது.

Tags

Next Story