உங்க குழந்தைகள் பழங்கள் சாப்பிடவில்லையா ? கவலையே படாதிங்க இந்த மிக்ஸ்டு ப்ரூட் கஸ்டர்டு ரெடி பண்ணிக் கொடுங்க !!!
மிக்ஸ்டு ப்ரூட் கஸ்டர்டு
தேவையான பொருட்கள் :
பால் - 1/2 லிட்டர்
மாதுளை பழம் - 1/2 கப்
ஆப்பிள் - 1
வாழை பழம் - 1
பச்சை திராட்சை - 1/2 கப்
கருப்பு திராட்சை - 1/2 கப்
பேரிச்சம் பழம் - 2 மேஜைக்கரண்டி
மாம்பழம் - 1/2 கப்
கஸ்டட் பவுடர் -2 மேஜைக்கரண்டி
சர்க்கரை - தேவையான அளவு
துருவிய பாதாம் - 1 மேஜைக்கரண்டி
துருவிய பிஸ்தா - 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
முதலில் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், மற்றும் மாம்பழத்தை கழுவி தயாராக வைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் கலக்காத கெட்டியான பாலை ஊற்றி சுடு படுத்திகொள்ளவும். பால் சுடுவதற்குல் ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி அளவு ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரை போட்டு 4 லிருந்து 5 மேஜைக்கரண்டி அளவு பாலை சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும். பால் சிறிது சுட்டதும் அதில் கலந்து வைத்திருக்கும் இந்த கஸ்டர்டு பவுடரை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். கஸ்டட் பவுடர் அடியில் சென்று தங்கி விடும் என்பதால் நன்றாக கலக்கவும். பின்பு பால் சிறிது நிறம் மாறியதும் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பிலிருந்து பாலை இறக்கி நன்கு ஆற விடவும். பால் நன்கு ஆறியவுடன் அதில் தயார் செய்து வைத்திருக்கும் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், மற்றும் மாம்பழத்தை ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இந்த கலக்கிய ஃப்ரூட் கஸ்டர்டை அப்படியே எடுத்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் இதை ஊத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை அதன் மேலே தூவி பரிமாறவும். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த மிக்ஸ்டு ப்ரூட் கஸ்டட் தயார்.