வெயிலுக்கு குளுகுளு பானகம் !!!
பானகம்
கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும், உடல் சூட்டை குறைக்கவும் இந்த பானகம் தயார் செய்து குடிப்பார்கள்.செய்வதும் மிக எளிது. எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருள்கள் :
புளி - எலுமிச்சை பழ அளவு, வெல்லம் - 1 கப், சுக்குப்பொடி - கால் ஸ்பூன், ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன், தண்ணீர் - 5 டம்ளர், உப்பு - 1 சிட்டிகை, பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை, எலுமிச்சை பழம் - பாதி.
செய்முறை :
புளியை ஊறவைத்து நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் அளவு வெந்நீரை ஊற்றி அதில் வெல்லத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.
அதில் புளி கரைசலைச் சேர்த்து அதோடு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக எலுமிச்சை பழ சாற்றை சேர்த்தால் சுவையான, வெயிலுக்கு குளுகுளு பானகம் தயார்.
Next Story