பால் சர்பத் குடிக்கலாமா !! அட செய்முறை சொன்ன தான குடிக்க முடியும்..? வாங்க சொல்கிறேன்....

பால் சர்பத் குடிக்கலாமா !! அட செய்முறை சொன்ன தான குடிக்க முடியும்..? வாங்க சொல்கிறேன்....

பால் சர்பத்

பால் சர்பத் என்பது பால், நானாரி சிரப், சப்ஜா விதைகளை முக்கிய பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இது தென்னிந்தியாவிலும், தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் பிரபல கிடைக்கக்கூடியது. இது சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

பால்

சிரப்

சப்ஜா விதைகள்

பாதாம் பிசின்


செய்முறை :

பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை 10 முதல் 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

பாலை கொதிக்க வைத்து, முழுமையாக குளிர்வித்து சேர்த்து கொள்ள வேண்டும்.

அரைத்த ஐஸை பரிமாறும் கிளாஸில் ¼வது வரை சேர்க்கவும்.

அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்க்கவும்.

அதன் பிறகு, ஊறவைத்த சப்ஜா விதைகளை 2 டீஸ்பூன் சேர்க்கவும்.

2-3 டேபிள் ஸ்பூன் நானாரி சிரப்பை அல்லது உங்கள் இனிப்பு விருப்பத்திற்கு ஏற்ப ஊற்றவும்.

அதன் மேல் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.நம்ம பால் சர்பத் தயார்.

Tags

Read MoreRead Less
Next Story