கண்ணுக்கு குளிர்ச்சியா இந்த காரட் கீர் குடிங்க!
காரட் கீர்
காரட் கீர்
ஐந்து நபர்களுக்கு தேவையான பொருட்கள்
500 கிராம் - காரட்
தேங்காய் துருவல் - 2
பேரீட்சை, அல்லது தேன் அல்லது வெல்லம்தூள் 200 கிராம்
ஏலம்தூள் - சிறிது
தயாரிப்பு முறை:-
காரட்டுகளைக் கழுவித் துருவல் செய்து மிக்ஸியியில் அரைத்து நீர் சேர்த்து வடிகட்டிச்சாறு எடுக்கவும் தேங்காய் துருவலை அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுக்கவும் பேரீட்சை சேர்த்தால கொட்டை நீக்கி அதை சாறு எடுக்கலாம்.
காரட்சாறு. தேங்காய் பால், பேரீட்சைசாறு அல்லது தேன் ஏல்மதூள் அனைத்தையும் கலந்தால் காரட் கீர் சுவைத்திட ரெடி ரோஸ்கீர் போல் மிகவும் கவர்ச்சியான சத்தான பானம்
காரட் + பேரீட்சை (அ) தேன் + தேங்காய் பால் = காரட்கீர்
பயன்கள்:-
கண்ணாடி அணிந்த அன்பர்கள், மாலைக்கண் பிணியாளர்கள் அடிக்கடி அவசியம் சாப்பிட வேண்டிய பானம் - பள்ளிச்சிறுவா சிறுமியர் ஆர்வமுடன் சாப்பிடும் பானம் -இயற்கை நலவாழ்வு முகாமில் காரட்கீர் எல்லோரும் விரும்பும் உணவு கடின மலச்சிக்கலை நீக்கும் குடல்புண், வயிற்றுப்புண அன்பர்கள் நலம் பெறுவர் தொடர்ந்து காரட்கீர் அருந்தினால் புற்று நோயும் குறையும் முகம் பொழிவு பெறும். இளமை மேம்படும் ஆரோக்கிய அதிசய டானிக் உணவு. மாலைக்கண் வியாதி அன்பர்கள் தினமும் காரட்கீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
புதுஇரத்தம் ஊறி உடலில் புத்துணர்ச்சி மெருகேறும் வாழும் காலமெல்லாம் காரட் கீர் சாப்பிடத் தயக்கம் கூடாது
தயாரிப்பும் சுலபம். தேங்காய் பாலுக்குப் பதில் முளை தானியப் பால்களும் சேர்க்கலாம். உலகின் ஒரு கோடியில் (மூலையில்) உள்ள காப்பேத்தியா மலைக் கிராமத்தில் இன்றும் காரட்டை மட்டுமே பெரும் பான்மை உணவாக இயற்கையாகச் சாப்பிடுகின்றனர்.
நெப்போலிய படை வீரர்களின் 60 to 80% சதவீத உணவுகள் இயற்கைக் காய்கறி உணவுகளாக இருந்துள்ளன காரட்டில் உள்ள கால்சியமும், கரோட்டினும் எளிதில் விரைந்து ஜீரணிப்பதுடன் விட்டமின் 'ஏ'வாக மாறி கல்லீரலில் சேமிப்பாக மாறுகிறது தினமும் ஒரு வேளை, வாரம் இருமுறை காரட்டை மட்டும் நீரழிவு அன்பர்கள்கூட உணவாக எடுத்து நலம் பெறலாம் என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அறிவிக்கிறது. காரட்டில் உள்ள (tocokinin) டாக்கோகினின் இன்சுலின் தன்மையிருப்பதால் நீரழிவு அன்பர்களும் பயம் இல்லாமல் பச்சையாகச் சாப்பிடலாம் அதேபோல் 22000 ஆயிரம் அமெரிக்க அன்பர்களுக்கு பச்சை காரட் உணவு வழங்கி ஆராய்ச்சி செய்ததில் பல அன்பர்கள் புற்றுநோய் கொடுமையில் இருந்து நலம் பெற்றனர் ஏனெனில் காரட்டில் உள்ள விட்டமின் 'இ' கான்சர் செல்களுக்கு எதிரியாக இருந்து புற்றுநோய் வளருவதைத் தடுக்கிறது தினமும் ஒரு காரட் கீர் குடித்துப் பல பிணிகளை உறுதியாகக் குறைத்திடலாம் கண்களை அருமையாய் காத்திடலாம்.