கிட்சன் டிப்ஸ் ..!

கிட்சன் டிப்ஸ் ..!

கிட்சன் டிப்ஸ்

  • கொதிக்கும் தண்ணீரின் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து மாலையில் இட்லி ஊற்றினால் பூப் போல் மிருதுவாக இருக்கும்.
  • ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கித் தோசைக் கல்லில் தேய்த்தால் தோசை மிகவும் எளிதாக வரும்.
  • தோசை வார்க்கும் போது கல்லோடு தோசை பிடித்துக் கொண்டால் சிறிது எண்ணெயுடன் உப்பையும் போட்டுத் தேய்த்து எடுத்த பிறகு தோசை ஊற்றினால் எளிதாக எடுக்க வரும்.
  • எண்ணெய்களுடன் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
  • கிழங்குகளை உப்புப் போட்டு வேக விடக் கூடாது. அப்படிச் செய்தால் கிழங்கு வேகாது. கிழங்குகளில் சேனையை மட்டும் தோலோடு வேக விடக் கூடாது.
  • காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அதன் இலைகளை நீக்கி விட்டு ஒரு பிடி உப்பு கலந்த தண்ணீரில் குடை மாதிரி அமிழ்ந்திருக்கும்படி வைக்க வேண்டும். இதனால் காலிபிளவரில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பூச்சிகள் எல்லாமே வெளியே வந்துவிடும்.
  • அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக் காய், வற்றல்களைக் குழம்பில் போடு வதற்கு முன் வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்துப் போட்டால் சுலபமாக வெந்து விடும்.

Tags

Read MoreRead Less
Next Story