ஈவ்னிங் நேர ஸ்நாக்ஸ் - முந்திரி பக்கோடா ரெடி !!

ஈவ்னிங் நேர ஸ்நாக்ஸ் - முந்திரி பக்கோடா ரெடி !!

முந்திரி பக்கோடா 

முந்திரியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட சமச்சீர் உணவுக்கு சிறந்த கூடுதலாக இருக்கும். முந்திரியில் முடி, தோல் மற்றும் பிற உறுப்புகளுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன.

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு - 30

வர மிளகாய் - 4

பெருங்காயம் - 1 சிட்டிகை

அரிசி மாவு - கால் கப்

கடலை மாவு - 1 கப்

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

முதலில் கடாயில் நெய் விட்டு உருகிய பின்பு மிதமான நெருப்பில் அனைத்து முந்திரி பருப்பையும் வறுத்து கொள்ள வேண்டும். பின் கொஞ்சம் உப்பு தூவி தனியாக வைத்துவிடவும்.

இதற்கிடையில், மிக்ஸி ஜாரில், வர மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மசாலா அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பவுலில் கால் கப் அரிசி மாவு, 1 கப் கடலை மாவு மற்றும் அரைத்த மசாலாவை ஒன்றாக சேர்க்க வேண்டும். அத்துடன் 2 டீஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

பின்பு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்

வழக்கமான முறையில் பக்கோடா பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்க வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும் வறுத்த முந்திரியை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்

இறுதியாக அதே எண்ணெயில் கறிவேப்பிலை போட்டு பொரித்து எடுத்து, முந்திரி மீது தூவி பரிமாற செய்யலாம். முந்திரி பக்கோ ரெடி.

Tags

Next Story