கோத்மீர்வடா ரெசிபி !!
Gothmeervada Recipe
தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒன்றரை கப்
வறுத்து பொடித்த வேர்க்கடலை - கால் கப்
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை
எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மற்ற அனைத்துப் பொருள்கள், அரைத்த விழுது மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாக முக்கால் முதல் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தடவிய ஒரு தட்டில் அரை அங்குலம் உயரம் வரும் வரை மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவிடவும். ஆறிய பிறகு ஓர் அங்குல சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதுதான் கோத்மீர்வடா. எண்ணெயைச் சூடேற்றி இந்த வடைகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துச் சட்னியுடன் பரிமாறவும்.