வித்தியாசமான முறையில் கிரேவி - தேங்காய் பால் லெமன் சிக்கன் !!
Coconut Milk Lemon Chicken
வழக்கமான சிக்கன் கிரேவிக்கு மாற்றாய் சிக்கன் துண்டுகளுடன் தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து வித்தியாசமான முறையில் கிரேவி ஒன்றை தயார் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 500கி
தேங்காய் பால் - 1 கப்
எலுமிச்சை பழம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கொத்து
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து பின் சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
பின்பு எலுமிச்சை பழங்களை இரண்டாக நறுக்கி - சாறு புழிந்து தயாராக எடுத்துக்கொள்ளவும்.
பின் அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள், மிளகாய் பொடி, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். இதனிடையே எடுத்துக்கொண்ட கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
20 நிமிடம் கழித்து, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை மட்டும் சேர்த்து பதமாக வறுக்கவும்.
பின் இதனுடன் சிக்கன் ஊற வைக்க பயன்படுத்திய தேங்காய் பால் - எலுமிச்சை சேர்மம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி, பதமாக வேக வைத்து இறக்க சுவையான தேங்காய் பால் லெமன் சிக்கன் ரெடி.