டேஸ்டி டொமேட்டோ கார்ன் பார்தா!
டொமேட்டோ கார்ன் பார்தா
டொமேட்டோ கார்ன் பார்தா
தேவையான பொருட்கள்:
ஃப்ரோசன் கார்ன் - 1 கப் (அல்லது) ஃப்ரெஷ் கார்ன் 2
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 400 கிராம்
மல்லித்தழை சிறிது
சீரகம் 1/2 ஸ்பூன்
கறி பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
சீரகப்பொடி 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 4 ஸ்பூன்
பூண்டு 2 பல்
பச்சை மிளகாய் 3
சர்க்கரை, உப்பு - தலா ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஃப்ரெஷ் கார்ன் என்றால் தண்ணீரில் போட்டு குக்கரில் இரண்டு விசில் வைத்தால் வெந்துவிடும். அதனை உதிர்த்துக்கொள்ளவும். ஃப்ரோசன் என்றால் செய் அப்படியே உபயோக்கிக்கலாம். வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய் இவைகளை பொடியாக நறுக்கிச் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு கோல்டன் ப்ரவுன் ஆனதும் கூறி பேஸ்ட் சேர்க்கவும். பின்பு சீரகப்பொடி, மல்லிப்பொடி மஞ்சள் பொடி, உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கவும். மசாலா சேர்ந்து வரட்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து கெட்டியாகி விடும். வேகவைத்த கார்ன், மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போய் மசாலா தள தள என்று வரவும் இறக்கவும். சுவையான டொமேட்டோ கார்ன் பார்தா ரெடி. இதனை சப்பாத்தி, பூரி, பரோட்டா, நாண் உடன் பரிமாறலாம்.