ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் பார்லி சூப்!!

பீட்ரூட் பார்லி சூப்
தேவையான பொருட்கள் :
பார்லி - 1 கப்
பீட்ரூட் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 4 பற்கள்
பிரியாணி இலை - 1
வெஜிடேபிள் ஸ்டாக் - 4 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பார்லியை ஜில் தண்ணீரில் நன்றாக கழுவி அழுக்கை நீக்க வேண்டும். பிறகு, பார்லி மென்மையாகிட 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்பு பீட்ரூட் உட்பட அனைத்து காய்கறிகளையும் சுத்தம் செய்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், அகலமான பாத்திரத்தை மிதமான தீயில் அடுப்பில் வைக்க வேண்டும். அதில் வெண்ணெய் சேர்த்துவிட்டு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் - தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்
அடுத்து, நறுக்கிய பீட்ரூட் மற்றும் ஊறவைத்த பார்லியை சேர்க்க வேண்டும். சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் தொடர்ச்சியாக கிளற வேண்டும்
இத்துடன் பிரியாணி இலை, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட்டு, வெஜிடேபிள் ஸ்டாக் ஊற்றி கொதிக்கவிடவும்
கலவை கொதிநிலைக்கு வந்ததும், அடுப்பை மிதமான நெருப்பில் வைக்க வேண்டும். சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்
சூப்பின் பதத்தை பொறுத்து கூடுதலாக வெஜிடேபிள் ஸ்டாக் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியாக, எலுமிச்சை சாறு மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சூடாக பரிமாறினால் சுவையான சூப் ரெடி.