ஆரோக்கியமான மில்லட் குலோப் ஜாமூன் !!

ஆரோக்கியமான மில்லட் குலோப் ஜாமூன் !!

 Millet Kulob Jamun

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - 1/2 கப்

கோதுமை மாவு - 1/2 கப்

நாட்டுச் சர்க்கரை - 3 கப்

கஸ்டர்டு பவுடர் - 1 ஸ்பூன்

பால் பவுடர் - 2 ஸ்பூன்

காய்ச்சி ஆறின பால் - 1 பெரிய டம்ளர்

ஏலத் தூள் - 1 ஸ்பூன்

சமையல் சோடா - 1 சிட்டிகை

உப்பு (ருசிக்கு) - 1 சிட்டிகை

பசு நெய் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 3 டம்ளர்

எண்ணெய்

அலங்கரிக்க - பாதாம்

செய்முறை :

கம்பு மாவையும், கோதுமை மாவையும் சலித்துக் கொள்ளவும்.பாதாமை சீவிக் கொள்ளவும்.கஸ்டர்டு பவுடரை பாலில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு உருகியதும் கம்பு மாவு, கோதுமை மாவு கருகாமல் வறுக்கவும். வறுபட்டதும், சிறிது சிறிதாக பாலை விட்டு நன்கு வேக வைத்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு தட்டில் எடுக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் தண்ணீர் விட்டு, கொதித்ததும், நாட்டுச் சர்க்கரையை போட்டு, கொதித்து கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும். ஆறி வெந்த ரவையில்,கரைத்த கஸ்டர்டு பவுடர், பால் பவுடர், சமையல் சோடா,சேர்த்து, தேவை என்றால் சிறிது பால் சேர்த்து, மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும். பிசைந்ததை கையில் நெய் தடவி, விருப்பமான வடிவில் தட்டிக் கொள்ளவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, வெல்லக் கரைசல், உப்பு, ஏலத்தூள் சேர்த்து, கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தி விடவும். வெல்லம் கரைந்து கொதித்தால் போதும்.பாகு பதம் தேவையில்லை.அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மீடியத்தில் வைத்து, தட்டினதை போட்டு, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.பிறகு அதன் மேல் வெல்லக் கரைசலை ஊற்றி, 15 நிமிடம் ஊற விடவும். பிறகு மேலே சீவின பாதாமை போடவும். இப்போது சுவையான மில்லட் குலோப் ஜாமூன் ரெடி.

Tags

Next Story