ஹெல்தியான மொறு மொறு கேரட் 65 மசாலா ... சும்மா அல்டிமேட்ட இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க !!!

ஹெல்தியான மொறு மொறு கேரட் 65 மசாலா ... சும்மா அல்டிமேட்ட இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க !!!

கேரட் 65 

தேவையான பொருட்கள்:

1. கேரட்- 100 கிராம்

2. இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு

3. உப்பு- சிறிதளவு

4. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

6. கார்ன் ப்ளவர் - சிறிதளவு

7. அரிசி மாவு - சிறிதளவு

8. எலுமிச்சை சாறு - ஒரு சிட்டிகை

9. நறுக்கிய வெங்காயம் - 1 கப்

10. கறிவேப்பிலை - சிறிதளவு

11. வறுத்த கடலை பருப்பு - சிறிதளவு

12. சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

13. மிளகாய் வத்தல் - 5


செய்முறை :

* கேரட் 65 மசாலா ரெசிபி செய்வதற்கு முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*பின்னர் கேரட்டை நன்கு கழுவிய பின்னதாக தோல் சீவிக் கொண்டு வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய கேரட்டுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது கார்ன் ப்ளவர் மற்றும் அரிசி மாவு சிறிதளவு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். மசாலாக்கள் கேரட்டில் பிடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கலந்துக் கொள்ள வேண்டும். கேரட் 65 க்கான பொருட்கள் இப்போது தயார்.

*பின்னர் மசாலா செய்வதற்கு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகாய் வத்தல் 5 மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டு தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

*அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட்டை பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொண்ட பின்னதாக அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்துக் கொள்ளவும்.

*ஒரு 5 நிமிடங்களுக்குப் பின்னதாக பொரித்து வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டால் போதும். சுவையான கேரட் 65 மசாலா ரெடி.

Tags

Next Story