ஆரோக்கியம் நிறைந்த நட்ஸ் பால்ஸ் !!

Nuts Balls
நம்ம வீட்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து அசத்த வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப பெஸ்ட். எளிமையான முறையிலும் ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும்.
நட்ஸ் உணவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வளமான மூலமாகும், இது உங்கள் இதயத்தை பிளேக் கட்டமைப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நட்ஸ் பல்துறை மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக அல்லது சமையலில் பயன்படுத்தப்படலாம்.
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்,
வறுத்த எள் - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - அரை கப்,
ரஸ்க் - 6,
பொடித்த வெல்லம் - 150 கிராம்,
பேரீச்சை - 6,
முந்திரி - 8,
உலர்திராட்சை,
டூட்டி ஃப்ரூட்டி,
நெய் - சிறிதளவு.
செய்முறை:
பேரீச்சையை பொடியாக நறுக்கி எடுத்துகொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடியாக அரைத்து கொண்டு அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறினால் நட்ஸ் பால்ஸ் ரெடி.