இதயத்தை ஆரோக்கியமாக்கும் "சௌ சௌ" காய் கூட்டு செய்வது எப்படி ?

இதயத்தை ஆரோக்கியமாக்கும் சௌ சௌ காய் கூட்டு செய்வது எப்படி ?

 "சௌ சௌ" காய் கூட்டு!

உடல் எடையை குறைக்க வேண்டுமா ?இந்த டிஸ் கண்டிப்பா உங்களுக்கு உதவும் .சௌ சௌவில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாகவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் இந்த "சௌ சௌ"காயில் கூட்டு செய்வது எப்டி எம்று இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

சௌ சுரைக்காய் - 1

பெரிய வெங்காயம் -1

கடலை எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்

கடுகு-1/4 டீஸ்பூன்

கருவேப்பில்லை- 2 கொத்து

உப்பு-தேவையானஅளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

பூண்டு-15பல்

தேங்காய்த்துருவல் -1/2 கப்

சீரகம்-1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய்-1

தயிர்-2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 சிட்டிகை

மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்

செய்முறை :

முதலில், தேங்காய்த்துருவல் , பூண்டு,சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துகொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

இதோடு தயிர், பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

பின்பு நறுக்கிய சௌ சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி 10 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வேக வைக்கவும்.

அதன் பின் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி கிளறி மிதமான சூட்டில் 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

இப்போது அருமையான "சௌ சௌ"கூட்டு தயார்.

Tags

Next Story