இதோ உங்க கிட்சன் டிப்ஸ்! சீக்கிரமா ஃபாலோ பண்ணுங்க !
கிட்சன் டிப்ஸ்!
- இட்லி தோசை மாவுடன் காய்ந்த மிளகாய் இரண்டு போட்டு வைத்தால் மாவு புளிக்காது.
- கடலை எண்ணெயில் சிறிது புளி உருண் டையைப் போட்டு வைத்தால் எண்ணெய் காறாது.
- வெண்ணெய் வாங்கி வீட்டிலேயே நெய் காய்ச்சிக் கொள்வது தான் நல்லது. காய்ச்சும் போது கடைசியாகக் கொஞ்சம் முருங்கைக் கீரையைப் போட்டால் நல்ல மணமாக இருக்கும். உருக்கிய நெய்யைப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும் முன் மெல்லிய துணியில் அதை வடிகட்டிக் கசடுகளை நீக்கி விட வேண்டும். கசடாகப் படிவது மண்ணும் மற்ற அசுத்தங்களும் தான்.
- வெண்ணெயைக் காய்ச்சி இறக்குகையில் அரை ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டால் நெய் நல்ல மணமாயிருக்கும்.
- நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு வெல்லத்தைப் போட்டு வைத்திருந்தால் நெய் மணம் மாறாமல் இருக்கும்.
Next Story