கோடை வெயிலில் ஒரு மில்க் ரெசிபி குடித்தால் எப்படி இருக்கும் !! வாங்க செய்யலாம் ..

கோடை வெயிலில் ஒரு மில்க் ரெசிபி குடித்தால் எப்படி இருக்கும் !! வாங்க செய்யலாம் ..

மசாலா மில்க்

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. சருமத்திற்கும், முடிக்கும் மிகவும் நல்லது. சருமத்தை பளபளப்பாக்கும். நம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் இத்தகைய நன்மைகள் உடைய பாலை வைத்து இன்னைக்கு சில ரெசிபிக்கள் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

முந்திரி-10

பாதாம்-5

பிஸ்தா-5

கிராம்பு-3

பால்-2 கப்.

சக்கரை-2 தேக்கரண்டி.

ஏலக்காய்-1/4 தேக்கரண்டி.

குங்குமப்பூ- சிறிதளவு.

செய்முறை :

மசாலா மில்க்முதலில் மிக்ஸியில் முந்திரி 10, பாதாம் 5, பிஸ்தா 5, கிராம்பு 3 சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் பால் 2 கப் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சவும். அதில் நிறத்திற்காக குங்குமப்பூ சிறிது சேர்த்து ஏலக்காய் ¼ தேக்கரண்டி, சக்கரை 2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு அதில் பொடி செய்து வைத்திருந்த முந்திரி, பிஸ்தாவை சேர்த்து கலக்கவும். இப்போது பாலை பொங்க விட்டு இறக்கியவுடன் இதை அப்படியே ஒரு கண்ணாடி கிளாசில் மாற்றி மேலே சிறிது குங்குமப்பூ அழகுக்காக சேர்த்து பரிமாறவும். இதை பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம். இந்த ரெசிபியை நீங்களும் உங்க வீட்டில் செய்து பாருங்கள்.

Tags

Next Story