அட்டகாசமான வத்த குழம்பு செய்வது எப்படி?

அட்டகாசமான வத்த குழம்பு செய்வது எப்படி?

 வத்த குழம்பு

வத்த குழம்பு என்றதுமே எல்லாருக்கும் நாவில் எச்சில் ஊரும் ... இன்னைக்கு ஒரு புடி புடிச்சிடனும் அப்டின்னு எல்லாருக்குமே தோணும்.எல்லோருக்கும் பிடித்த குழம்பு என்றால் அது வத்தக்குழம்பு தான், அதிலும் விஷேச நாட்களில் செய்யப்படும் வத்தக்குழம்பு சுவையில் அல்டிமேட்டாக இருக்கும். சரி வாங்க எளிமையான முறையில் சூப்பரான சுவையில் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தனியா (மல்லி) – 2 கைப்பிடி அளவு

சிவப்பு மிளகாய் – 10

வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை – 1 கொத்து

புளி – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

வத்தல் – தேவையான அளவு (சுண்டைக்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல், மணதக்காளி )

பூண்டு – 10 பல்

வெங்காயம் –1/4கிலோ

உப்பு – தேவையான அளவு

குறிப்பு :

1.வத்த குழம்பு செய்வது எப்படி: கடாயில் மல்லி 2 கைப்பிடி அளவு, சிவப்பு மிளகாய் 6, மிளகு 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து வறுத்து கொள்ளவும் (எண்ணெயில்லாமல் வறுக்கவும்).

2. பின் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை:

ஒரு கடாயில் ஒன்றரை குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு கடுகு 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் 2, வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, வத்தல் தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

வத்தல் நன்றாக கருத்து வரும் வரை வதக்கவும். பின் அதில் வெங்காயம் சிறிதளவு, பூண்டு 10 சேர்த்து வதக்கவும். வெங்காயம், பூண்டு பொன்னிறமான பிறகு புளிக்கரைசலை தேவையான அளவு ஊற்றவும்

பின் அதில் மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக வைக்கவும்.

கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியை 4 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் அதில் 1 சிட்டிகை பெருங்காய தூள், நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சூடான சுவையான, அருமையான வத்தல் குழம்பு தயார்.

Tags

Next Story