நண்டு வறுவல் மிக சுவையாக செய்வது எப்படி ? | சமையல் |king news 24x7

நண்டு வறுவல்
தேவையான பொருட்கள்
500 கிராம் நண்டு
1 வெங்காயம்
1 தக்காளி
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
3 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
1 டீஸ்பூன் உப்பு
1 கொத்து கறிவேப்பிலை
1/2 கைப்பிடி கொத்தமல்லி தழை
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
4 டீஸ்பூன் எண்ணெய்
3 டீஸ்பூன் தேங்காய் விழுது
சமையல் குறிப்புகள்.....
1 - நண்டை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
2 - வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்
3 - அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4 - வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
5 - பிறகு இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
6 - தண்ணீர் கொதித்ததும் நண்டு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
7 - மூடி போட்டு வேக வைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.