மள...மள...ன்னு மலாய் குல்பி செய்வது எப்படி ?
மலாய் குல்பி
குல்பி என்றல் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் மத்தியான வெயில் மண்டையில் அடிக்கும் போது எதாச்சும் சில்லுனு சாப்பிட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு ரெசிபி தான் இது . குல்பியுடன் செஞ்சு செல்பி எடுக்கலாம் வாங்க. மளமளன்னு மலாய் குல்பி எப்படி செய்வதென்று இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பால் -1/2 லிட்டர்
குங்குமப்பூ- சிறிதளவு
சர்க்கரை-2 கப்
பாதாம் பிஸ்தா- தேவைக்கேற்ப
ஏலக்காய்- 10
பிரஸ் கிரீம் -1/2 கப்
சோள மாவு -1டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வந்ததும் இரண்டு குழி கரண்டி பாலை தனியாக எடுத்து அதில் குங்கும பூ போட்டு ஊற வைத்து விட வேண்டும். பாலை நன்கு சுண்ட காய்ச்சவும். அதோடு ஏலக்காய் விதைகளை மட்டும் தனியாக எடுத்து பொடி செய்து பாலுடன் சேர்க்கவும். பாதாம் பிஸ்தாக்களை பொடிப்பொடியாக நறுக்கிக் வைத்து கொள்ளவும். இப்போது பாலுடன் ஃபிரஷ் ஆன ஐஸ்க்ரீம்- ஐ சேர்த்துக் நன்கு கலக்கி கொள்ளவும். இப்போது அரை கப் சர்க்கரையை தற்போது சேர்த்துக் கொள்ளவும். பொடி செய்து வைத்துள்ள ஏலக்காய் தூளை தூவவும்.இப்போது தயார் செய்து வைத்துள்ள குங்குமப்பூ பாலை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பூவின் கலரும் வாசனையும் பார்ப்பதற்கு ஒரு ரிச் லுக்கை கொடுக்கும். பாலை இன்னும் கெட்டி பாதத்திற்கு வரும்வரை குறைந்த தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். பின் கெட்டி பதத்திற்கு வந்ததும் பாதாம் பிஸ்தாக்களையும் சேர்த்து கிளறி விடவும். குல்ஃபி மிக்ஸி நல்ல கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு கீழே இறக்கி ஆற விடவும். இப்போது சம அளவில் உள்ள டம்ளரில் மிக்சரை ஊற்றி 8 அல்லது 12 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான சில்லுனு மலாய் குல்பி ரெடி.இன்னும் ஏன் வெய்ட் பன்றிங்க குல்பி செஞ்சு செல்பி எடுத்து அசத்துங்கள் .
குறிப்பு :
தேவையென்றால் ஒரு ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.