மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?

மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?

மீல் மேக்கர் கிரேவி 

ஒரு அட்டகாசமான , டிப்ரண்டான மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ? என இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 1/2 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருள்கள்:

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 2

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பட்டை-2

கிராம்பு-2

ஏலக்காய் -2

சீரகம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் தண்ணீரைகொதிக்க வைத்து ஊற்றி அதில் மீன் மேக்கரை சேர்த்து பின் இறக்கி ஊறவிடுங்கள்.

அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து வதக்கவும்.

பின் இதனுடன் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலைகளை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதில் பூண்டு, இஞ்சி மற்றும்பச்சை மிளகாய் இந்த மூன்று பொருட்களையும் நன்றாக இடித்து சேர்த்துக் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பின் இதனுடன் தக்காளி அரைத்து சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கிளரி விடவும். அதன் பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து

ஒரு நிமிடம் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.பின் இதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி கிரேவியை ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு நாம் வேக வைத்த மீன் மேக்கரில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து வெளியேற்றி பின் கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

பின் சிறிது கொத்தமல்லி தலையை தூவி கடாயை இறக்கி விடுங்கள் சுவையான மீன் மேக்கர் கிரேவி தயார்.

சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி மற்றும் சாதத்திற்கு சேர்த்து சாப்பிடலாம் .

Tags

Next Story