கரகர...மொறு மொறு... கடலை மிட்டாய் செய்வதெப்படி!

கரகர...மொறு மொறு...  கடலை மிட்டாய் செய்வதெப்படி!

 கடலை மிட்டாய்

நினைத்த வடிவில் சுவைத்து மகிழ சூப்பரான,ஆரோக்கியமான மிட்டாய் தான் கடலை மிட்டாய் .இதை வீட்டிலேயே செய்து உங்கள் ஆரோக்கியத்தையும் பணத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள் .அனைவரும் விரும்பி சுவைக்கும் கரகர...மொறு மொறு... கடலை மிட்டாய் செய்வதெப்படி! என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள் :

நிலக்கடலை- 2கப்

வெல்லம் -11/2 கப்

நெய் -4டீஸ்பூன்

தண்ணீர் -100 கிராம்

ஏலக்காய் -10

உப்பு -1 சிட்டிகை

செய்முறை ;

முதலில் அடிகனமான பாத்திரத்தில் உரித்த கடலைப்பருப்பை நன்கு வறுத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். முக்கியமாக அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்அடிபிடிக்காமல் வறுக்கவும். வறுத்த பருப்பை நன்கு தோல் நீக்கி ஒன்று இரண்டாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்காமல் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வேறொரு வானொலியை அடுப்பில் வைத்து மேலே சொன்ன தண்ணீர் அளவு சேர்த்து அதனுடன்வெல்லத்தை இட்டு நன்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும். சரியான பதத்திற்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள கலவையை கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து பார்க்கவும் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி எடுக்கும்போது கம்பி போன்ற நூல் வரும்.அப்படி வந்தால் வெள்ளப்பாகு தயார்.பாகு கட்டி ஆகிவிட்டால் கடலை மிட்டாய் சரியாக வராது அதனால் நெய்யைசூடாக்கி அந்த பாகில் சேர்த்து கிளறினால் சரியாகிவிடும்.இப்போது கரகரப்பாக அரைத்த கடலைபருப்பை அதில் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் உப்பு,ஏலக்காய் தூளை தூவி விடவும் . பின் அகலமான ஒரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில்பரப்பி விடவும் . இப்போது தேவையான வடிவத்தில் கத்தியை வைத்து வெட்டி ஆற விடவும்.இப்போது சுவையான கரகர மொறுமொறு கடலை மிட்டாய் தயார்.

குறிப்பு :

இதே செய்முறையை பயன்படுத்தி எள் உருண்டை செய்யலாம் .

Tags

Next Story