ஈசியா.. டக்குனு .. சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி ?

ஈசியா.. டக்குனு .. சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி ?

சர்க்கரை பொங்கல்

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் செய்வதற்கு பொருட்களை வாங்க ஆரம்பித்திருப்பார்கள். சிலர் பாரம்பரிய முறையில் வீட்டிற்கு வெளியே மண்பானையில் பொங்கலை வைப்பார்கள்.

ஆனால் நகர்புறங்களில் இருப்பவர்களுக்கு அப்படியான சூழ்நிலை இல்லாததால், குக்கரில் பொங்கல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருள்:

பச்சரிசி – 1 கப்

பாசிப் பருப்பு - 1/2 கப்

கொதிக்க வைத்த பால் - 1 கப் *

தண்ணீர் - 2 கப்

வெல்லம் – 2 கப்

ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

நெய் – 3 மேஜைக்கரண்டி/ தேவையான அளவு

முந்திரிப் பருப்பு – தேவையான அளவு

காய்ந்த திராட்சை – தேவையான அளவு

பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை

குறிப்பு :

சர்க்கரை பொங்கலுக்கான சாதத்தை வேக வைக்கும் போது நன்றாக குழைந்து இருக்கும்படி வேக வைக்கவும்.

ஒரு பங்கு பச்சரிசிக்கு ஒன்றரை பங்கு முதல் இரண்டரை பங்கு வரை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

வெல்ல பாகு காய்ச்சிய பிறகு அதனை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஏனென்றால் வெள்ளத்தில் சிறிய கற்கள் மற்றும் மண் இருக்க வாய்ப்புள்ளது.

உங்களுடைய விருப்பத்திற்கேற்ப நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பசு நெய் பயன்படுத்தும் பொழுது சுவையும் மணமும் அதிகமாக கிடைக்கும்.

தவறாமல் 1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்,

செய்முறை:

1.1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாசிப்பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.

2.பச்சரிசியை சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வறுத்து, இறக்கிக் கொள்ளவும். பின்பு அதை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.

3.பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, கழுவிய அரிசியுடன் பால் மற்றும் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.

4.விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி மற்றும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் அதில் கொதிக்க வைத்துள்ள பால் அல்லது நீரை வேண்டுமானால் சிறிது ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும்.

5.பின் காச்சிய பாகுவை குக்கரில் உள்ள அரிசியில் வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைக்கவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், இந்நிலையில் சூடான பால் அல்லது நீரை ஊற்றி, அடிபிடிக்காமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இல்லாமல், ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போதே, அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிவிடுங்கள்.

6.இப்போது ஒரு சிறிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு வறுத்து, பொங்கலுடன் சேர்த்து , அதன் மேல் சிறிது ஏலக்காய் பவுடர், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான சர்க்கரை பொங்கல் தயார் .

Tags

Next Story