தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி.?
தக்காளி இல்லாமல் ரசம்
வீட்டில் தக்காளி இல்லையென்றால் சிலர் ரசம் வைக்க மாட்டார்கள். ஆனால் தக்காளி இல்லாமலும் ரசம் வைக்கலாம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில்
மிக அற்புதமான ஆரோக்கியமான் முக்கியமா செரிமானத்துக்கு உதவக்கூடியது ரசம் தான் .அந்த ரசத்தை எப்படி இருக்குறத வச்சு சமைக்கலாம்னு இந்த பதிவுல பாக்கலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
எண்ணெய்- 1 ஸ்பூன்
கடுகு- 1/2 ஸ்பூன்
வெந்தயம்- 1/4 ஸ்பூன்
புளி- நெல்லிக்காய் அளவு
வர மிளகாய்- 3
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகு- 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி- 1 ஸ்பூன்
பூண்டு- 7 பற்கள்
பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை- 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை- 2 கொத்து
கொத்தமல்லி இலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை :
முதலில் நெல்லிக்காய் அளவில் புளியை எடுத்து ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
சீரகம், மிளகு, கொத்தமல்லி, பூண்டு, வரமிளகாய், பெருங்காய தூள் மற்றும் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, புளி கரைசலில் மஞ்சள் தூள், அரைத்து வைத்த மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றக கலந்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
பின், அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 2வர மிளகாய்,பெருங்காயம் சேர்த்து தாளியுங்கள்.
இப்போது கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு, இதில் நாட்டு சர்க்கரை மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி, ரசம் கொதித்து வரும் நிலையில் இறக்கினால் தக்காளி இல்லாத ஆரோக்யமான சுவையான ரசம் தயார்.!