பீர்க்கங்காய் தொக்கு செய்வது எப்படி ?
பீர்க்கங்காய் தொக்கு
பீர்க்கங்காய் என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்காது. அப்படிப்பட்டவர்களும் இந்த பதிவை பார்த்ததும் உடனே செய்து பார்ப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உடலில் வீக்கத்தைக் குறைப்பதில் இருந்து எடை இழப்புக்கு உதவுவது வரை, பீர்க்கங்காயை உணவில் சேர்ப்பது பல நன்மைகளைத் தருகிறது.இப்படி பட்ட இந்த காயை எப்படி எல்லோருக்கும் பிடித்தது போல் சமைப்பது என்ற குழப்பம் இனி வேண்டாம் .எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் .
தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய்-1/4 கிலோ
நிலக்கடலை பருப்பு -ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய்- 100மி
கடுகு- 1/4 டீஸ்பூன்
சீரகம்-1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை-1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
தனியா -1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
குறிப்பு :
நிலக்கடலையை வறுத்து ,தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் .
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் சீரகம், பச்சை மிளகாய் கீறி சேர்த்து கொள்ளவும்.பின் கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது வாசனை வந்ததும் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்த பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெயில் காய் நன்கு வதங்கியதும் , இதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.எண்ணெய் பிரிந்து வரும் போது வறுத்து அரைத்து வைத்த நிலக்கடலை பருப்பு பொடியை இதில் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதிய விடவும். எண்ணெய் திரண்டு மேலே வரும் போது சிறு துண்டுகளாகநறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி விடவும். மணமான அருமையான பீர்க்கங்காய் தொக்கு ரெடி.