கோடையில் குளு...குளு... குல்கி சர்பத் செய்வது எப்படி ?
குல்கி சர்பத்
உச்சி வெயிலில் உன்னதமாகவும் ,கத்திரி வெயிலுக்கு கச்சிதமாவும் குடிக்க இந்த குளுகுளு குல்கி சர்பத்தை ட்ரை பண்ணுங்க.நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும் .எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சப்ஜா விதைகள்-2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-1
எலுமிச்சை பழம் -1
சர்க்கரை-2 ஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை
ஐஸ் கட்டி-தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் சப்ஜா விதைகளை ஐந்து நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின் எலுமிச்சை பழத்தை மூன்றாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை மூன்றாக கீரி விடவும். இப்போது ஒரு டம்ளரில் வெட்டி வைத்த சிறு எலுமிச்சம் துண்டை ஒரு போடவும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு இரண்டு டீஸ்பூன் சர்க்கரைசேர்த்து கொள்ளவும்.வேண்டுமென்றால் தேனை உபயோகித்துக்கொள்ளலாம். அப்பொழுது மீதமுள்ள எலுமிச்சையை சாறு பிழிந்து விடவும். இப்போது ஊற வைத்த சப்ஜா விதைகளையும் கீறிய பச்சை மிளகாய் போட்டுக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த டம்ளர் மேல் மற்றொரு டம்ளரை வைத்து மூடி நன்கு கலக்கி கொள்ளவும். இப்போது குளுமையான குல்கி சர்பத் ரெடி.