செங்கிழங்கு பருப்பு உசிலி செய்வது எப்படி ?
செங்கிழங்கு பருப்பு உசிலி
விரும்பதவர்ளும் விரும்பி சாப்பிட வைக்கும் ஒரு நல்ல டிஷ் தான் இந்த பதிவு.செங்கிழங்கா ? அப்டினா என்ன? என்ற கேள்வி எழுகிறதா?.அது வேறொன்றுமில்லை 'பீட் ரூட்' தாங்க அது . செங்கிழங்கு பருப்பு உசிலி செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க .
நாம் ஏன் இதை சாப்பிட வேண்டும் . தெரிந்துகொள்வோம்!
உடல் வலிமையை அதிகரிக்க, ஞாபகசக்தியை அதிக படுத்த ,எலும்புகளை வலுப்படுத்த,இரும்புச்சத்து குறைபட்டை நீக்க ,
சரும ஆரோக்கியத்திற்கு,குடல் மற்றும் செரிமானத்துக்கு இதை சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1
கடலை பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
வர மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நறுக்கிவைத்த பீட்ரூடை கொஞ்சம் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
கடலை பருப்பு ,துவரம் பருப்பையும் நன்றாக அலசி அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும் . பின் ஊறவைத்த பருப்பை பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். உங்களுக்கு சோம்பு சுவை பிடிக்கும் என்றால், அதையும் சேர்த்துக்கொள்ளலாம் .
அரைத்த பருப்பை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக் எடுத்து கொள்ள வேண்டும்.
கிழங்கு ஆறியவுடன் அதை பருப்பு கட்டையை வைத்து நன்கு கொரகொரப்பாக மசித்து கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், இந்த பொடித்தபருப்பு கலவையை அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் வறுத்துவிட்டு, பின் வேகவைத்த பீட்ரூட்டையும் அதில் சேர்க்க வேண்டும். தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து வேகவைக்க வேண்டும். 2 நிமிடம் வெந்ததும் இறக்கி பரிமாறலாம் .
சாம்பார் சாதம், தயிர் சாதம், மோர் குழம்பு சாதம், ரசம், புளிக்குழம்பு இவற்றுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமான சுவையாக இருக்கும் .