பர்ஃபெக்ட்டான... பாதாம் பால் செய்வது எப்படி ?

பர்ஃபெக்ட்டான... பாதாம் பால் செய்வது எப்படி ?

பாதாம் பால் 

பாலர்கள் முதல் பாதம் ஓய்ந்தவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம் பாலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் . பக்கம் பக்கமாக வசனம் இல்லாமல் பட்டுன்னு பதிவுக்குள்ள போகலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

பால்-2கப்

குங்குமப்பூ - 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு -1/2 கப்

சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள்- -1/2 டீஸ்பூன்

பனிக்கூழ் கட்டி (ஐஸ் க்யூப்)-தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு கப் சூடான பாலில் குங்குமப்பூவை தூவி ஊற வைக்கவும். குங்குமப்பூ கலர் அந்த பாலில் நன்கு இறங்கும் வரை ஊற வைக்க வேண்டும். அரை கப் பாதாம் பருப்பை 8 மணி நேரம் ஊற வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸி ஜாரில் உறித்த பாதாம் பருப்பை கொஞ்சம் பால் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும்.அரைத்த பாதாம் பேஸ்டுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், காய்ச்சி ஆற வைத்த பால் ஒரு கப் , எடுத்து வைத்த குங்குமப்பூ பாலையும் சேர்த்து இதனோடு பனிக்கூழ் கட்டிகளை (ஐஸ்கிரீம்) சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.இப்போது சில்லுனு பாதாம் பால் ரெடி. நறுக்கிய பாதம் , முந்திரி, குங்குமப்பூ மேலே தூவி பரிமாறவும்.டேஸ்ட் அள்ளும் .

Tags

Next Story