சுண்டைக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

சுண்டைக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

சுண்டைக்காய் கார குழம்பு

பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க….

காரகுழம்பு என்றாலே நாவில் எல்லாருக்கும் எச்சில் சொட்டும் ,அதுவும் சுண்டைக்காய் கார குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம் .கொஞ்சமா குழம்பு ஊற்றி நிறைய சாதம் சாப்பிடனுமா ? அப்போ இந்த மாறி சமைச்சு பாருங்க பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

தக்காளி -2

பச்சை சுண்டைக்காய் - 1௦௦ கிராம்

சின்ன வெங்காயம் - தலா ஒரு கப்

தேங்காய் துருவல் - சிறிதளவு

பூண்டு - 2 பல்

கீறிய பச்சை மிளகாய் - 2

பெருங்காயம் -1 சிட்டிகை

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

குழம்பு பொடி - 2 டீஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்

ந .எண்ணெய்-தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி ,தேங்காயை வதக்கி ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

புளியைக் கரைத்து வைத்து இதில் மஞ்சள்தூள், குழம்பு பொடி போட்டு, மிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப போட்டுக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணை ஊற்றி , காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயையும் போட்டு நன்றாக வதக்கவும்.

கரைத்து வய்த்த புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து கொள்ளவும் .எண்ணெய் திரண்டு மேலே வரும் வரை கிளறவும் .சிறிது கொத்துமல்லி தலையை தூவி இறக்கவும் காரசாரமான சுண்டைக்காய் கார குழம்பு ரெடி .

குறிப்பு :

இத்துணூண்டு சுண்டைக்காய், ஜீரண ஆற்றலை மேம்படுத்த ,மாதவிடா யை சீர்படுத்த , சிறுநீரக செயலிழப்பை தடுக்க ,இதய ஆரோக்கியம் மேம்படுத்த,​நீரிழிவை கட்டுக்குள் வைக்க

​நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கனு எவ்ளோ சமாச்சாரம் இருக்குங்க .மறக்காம ட்ரை பண்ணுங்க .

Tags

Next Story