பிரட்-டும் முட்டையும் இருக்க அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க !!

பிரட்-டும் முட்டையும் இருக்க அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க !!

பிரட் ஆம்லெட்

தேவையான பொருட்கள் :

பிரேட் - 10 துண்டுகள்

முட்டை - 3

குடை மிளகாய் - 1

கேரட் - 2

வெங்காயம் - 5

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், குடை மிளகாய், கேரட் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பின் ஒரு பௌலில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிய வெங்காயம், குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு அடித்து கலக்க வேண்டும்.

பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.

ஒரு புறம் வேகும் போதே பிரட் மேல் கலக்கி வைத்திருந்த முட்டை கலவையை வைக்க வேண்டும்.

அடியில் வெந்ததும் பிரட்டை திருப்பி போட்டு வேக வைத்தால் சுவையான பிரட் ஆம்லெட் தயார்.

Tags

Next Story