பன் பட்டர் சுகர் டேஸ்ட் பண்ணி பாருங்க சும்மா அல்டிமேட்டா இருக்கு !!
பன் பட்டர்
தேவையான பொருட்கள் :
பன்
வெண்ணெய்
சர்க்கரை
செய்முறை :
முதலில் மிருதுவான வெண்ணையை நன்றாக அடித்த கிரீம் போல் செய்து கொள்ளவும்.
ஒரு பன்னின் நடுப்பகுதியை முக்கால் பகுதி வரை வெட்டிக்கொள்ளவும் பிறகு மேல்பக்கம் மட்டும் கீழே பக்கங்களை தயாரித்து வைத்திருக்கும் வெண்ணையை பரவலாக தேய்க்கவும், இறுதியாக அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மூடவும்
இரும்பு தோசை சட்டியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் சேர்க்கவும். பிறகு தயாரித்து வைத்திருக்கும் பன்னை அதன் மேல் வைக்கவும், பிறகு தயாரித்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையை அதன் மேல் தேய்த்து மிதமான தீயில் இரண்டு பக்கமும் அழுத்தி சுட்டெடுக்கவும்.
வெண்ணெய் முழுவதும் பன் உறிஞ்சிய பிறகு அதை எடுத்து இலையின் மேல் வைக்கவும். இறுதியாக ஒரு டீஸ்பூன் வெண்ணெய் அதன்மேல் வைத்து சர்க்கரையை தூவி பரிமாறவும்.
சுவையான மதுரை பேமஸ் பன் பட்டர் சுகர் ரெடி.