குட்டி குட்டி சமையல் டிப்ஸ் !

குட்டி குட்டி சமையல் டிப்ஸ் !

சமையல் டிப்ஸ்

டப்பாவில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தைப் பேப்பரில் மடித்து வைத்து மேலே லட்டுகளை வைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

சீடை, முறுக்கு, தட்டை எது செய்வதாக இருந்தாலும் மாவில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிப் பிசைந்து செய்தால் அது எந்த எண்ணெயில் செய்த தாக இருந்தாலும் தேங்காய் எண்ணெயில் செய்தது போல ருசியுடன் இருக்கும்.

எண்ணெய்ப் பலகாரம் செய்யும் போது எண்ணெய் பொங்கி வழிந்தால் கறிவேப்பி லையையோ, சிறிது புளியையோ போட்டு எடுத்து விட்டுப் பயன்படுத்தினால் எண்ணெய் பொங்குவதையும், காறல் வாசனையையும் தவிர்க்கலாம்.

தேங்காயை உடைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்தால் நேர் பாதியாக உடைபடும். தேங்காய் துருவும் போது பிசிறுகள் பாத்திரத்தில் விழாது.

தேங்காய் மூடிகளைத் துருவும் போதோ கீற்றுகளைப் பெயர்க்கும் போதோ மூடியை மடியில் வைத்துக் கொண்டு செயல் படக்கூடாது.

Tags

Next Story