மெட்ராஸ் சிக்கன் கறி ரெசிபி !!

மெட்ராஸ் சிக்கன் கறி ரெசிபி !!

மெட்ராஸ் சிக்கன் கறி

 


தேவையான பொருட்கள் :

எலும்பு இல்லாத கோழி - 50 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மெட்ராஸ் கறி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

நெய் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 1 கப்

இஞ்சி - 1 டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

தக்காளி - 1 கப்

கேப்சிகம் - 1

கேரட் - 1

சர்க்கரை 1 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

செய்முறை :

கோழிக்கறியை எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கழுவி ஊற வைக்கவும். கொத்தமல்லி இலைகள், மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இதற்கிடையில், ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், கேரட் மற்றும் இஞ்சி பூண்டை 5 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி, கேப்சிகம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். அதை ஆறவைத்து, அனைத்தையும் ஒரு அரைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் மேரினேட் செய்த கோழியைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

அரைத்து வைத்ததை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும். அடுத்து, 1 கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.

5-10 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது, சர்க்கரை, உப்பு மற்றும் கரம் மசாலாவை சுவைக்க சேர்க்கவும். மேலும், தேங்காய் பால் சேர்த்து 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.

கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Tags

Next Story