டெய்லி காலைல இட்லி தோசையே செய்யாம 1 தடவ சிந்தாமணி அப்பம் செய்ங்க! எத்தனை வச்சாலும் சைலன்ட்டா சாப்பிட்டுருவாங்க

டெய்லி காலைல இட்லி தோசையே செய்யாம 1 தடவ சிந்தாமணி அப்பம் செய்ங்க! எத்தனை வச்சாலும் சைலன்ட்டா சாப்பிட்டுருவாங்க

சிந்தாமணி அப்பம்

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்புகள் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி கிட்டதட்ட 6 மணி நேரங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியும்,பருப்பும் ஊறிய பின்னர் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்சி ஜாரில் சேர்த்துக் கொண்டு சிறிது உப்பு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கொரகொரவென அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவினை 4 மணி நேரங்கள் வரை புளிக்க வைக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயதூள் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கின அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அடுப்பில் பணியார சட்டி வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின், மாவினை ஊற்றி விட வேண்டும். குழிகளில் சுற்றி சிறிது எண்ணெய் சுற்றி ஊற்றி, ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வெந்த பின் எடுத்து விட்டால் டேஸ்டான சிந்தாமணி அப்பம் ரெடி!

Tags

Next Story