பழைய சாதத்தில் 3வகையான பனியாரம்... செய்வது எப்படி?

பழைய சாதத்தில் 3வகையான பனியாரம்... செய்வது எப்படி?

 பனியாரம்

தினமும் சாதம் மீந்து போகுதுன்னு கவலை படுகிறீர்களா ? பழைய சாதத்தை என்ன செய்வதென்று யோசிக்கிரீங்களா?அதுவும் குழந்தைகளும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்போ உங்களுக்குத்தான் இந்த பதிவு .ஒரே கல்லில் 3 மாங்காய் அடிப்பது போல் ஒரே மாவில் 3 வகையான டிஷ் செய்யலாம் .அதுவும் பழைய சாதத்தில் என்றால் விட்டுவிடுவோமா என்ன? பார்த்திடலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

பழைய சாதம் -2 கப்

தோசை மாவு- ஒரு கப்

பெரிய வெங்காயம் -1

முட்டை கோஸ்-1/2 கப்

குடமிளகாய் -1

கேரட்-2

பச்சை மிளகாய்-3

எண்ணெய்-100 ml

உப்பு-தேவையான அளவு

செய்முறை :

முதலில் 6 அல்லது 8மணி நேரத்திற்கு முன்பு வடித்த பழைய சாதத்தை எடுத்துகொள்ளவும். சாதத்தை ஒன்று இராண்டாக மசித்துக் கொள்ளவும். முக்கியமாக சாதத்தை மிக்சியில் அடிக்க கூடாது .இப்போது சாதத்தில் தோசை மாவை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தலை மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கி கொள்ளவும்.தேவைபட்டால் கொஞ்சமாக தண்ணீர்ஊற்றி கலந்து கொள்ளலாம் இல்லை என்றால் தோசை மாவு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தோசை மாவு பதத்திற்கு இல்லாமல் கட்டியாக இருக்க வேண்டும் அதிகமாக தண்ணீரோ, மாவோ சேர்க்கக்கூடாது என்பதில் கவனம் . அப்போதுதான் பனியாரம் மொறு மொறுன்னு க்ரிஷ்பியாக கிடைக்கும்.இப்போது குழி பணியாரம் செய்வதற்கு மாவு தயார்.அடுப்பில் குழிப்பணியாரம் சட்டியை வைத்து தேவையான நெய் அல்லது என்ணெய் விட்டு சூடானதும் கலக்கி வைத்த மாவை அதில் இடவும். இரண்டு புறமும் திருப்பி போட்டு சுட்டு எடுத்தால் பழைய சோறு பனியாரமாக ரெடி.

குறிப்பு :

இதே செய்முறையில் தோசை கல்லில் அடையாகவும் செய்து சாப்பிடலாம். அல்லது எண்ணெயில் பொறித்து எடுத்தால் பக்கோடாவாக கிடைக்கும் .

Tags

Next Story