மாம்பழ ரசமலாய் ரெசிபி !!

மாம்பழ ரசமலாய் ரெசிபி !!

மாம்பழ ரசமலாய் ரெசிபி

தேவையான பொருட்கள் :

மாம்பழம் - 1

சர்க்கரை - 2 கப்

பால் - 11/2 லிட்டர்

எலுமிச்சை பழம் - 1

சோள மாவு - 1 ஸ்பூன்

பிஸ்தா - சிறிதளவு

செய்முறை :

ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்து கொதி வரும்போது ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து 5 நிமிடம் கிளறிய பின் அடுப்பை அணைத்து துணியில் போட்டு வடிகட்டி தண்ணீரில் காட்டி எடுத்து வைத்துக் கொள்வோம்.அதில் சோள மாவை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக்கி கொள்வோம்.

2 கப் சர்க்கரையை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைத்துக்கொள்வோம்.மாம்பழத்தில் பாதியை சிறு துண்டுகளாக்கி எடுத்து,பன்னீர் உருண்டையின் நடுவே வைத்து உருண்டையாக உருட்டி தட்டி கொள்வோம்.அதை சர்க்கரை பாகில் போட்டு மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.

மாம்பழத்தில் மீதி பாதியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு கூழாக அரைத்து,காய்ச்சி குளிர வைத்த பாலில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி அதில் ரசகுல்லா வை போட்டு குளிரவைத்து பிஸ்தா,மாம்பழத் துண்டுகள் தூவி அப்படியே சாப்பிடலாம். சூப்பரான மாம்பழ ரசமலாய் தயார்.

Tags

Next Story