மிக்ஸ் மில்லட் அடை !!
மிக்ஸ் மில்லட் அடை
தேவையான பொருட்கள்: -
கம்பு - 1/4 கப்
ராகி - 1/4 கப்
தினை - 1/4 கப்
வரகு சோளம் - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
(கறிவேப்பிலை கொத்துமல்லித்தழை) - சிறிதளவு
செய்முறை: -
அனைத்து தானியங்களையும் பருப்புகளையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, உப்பு சேர்த்து அடையாக ஊற்றவும்.
இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.
Next Story