மொஹபத் கா ஷர்பத் !!!

மொஹபத் கா ஷர்பத் !!!

மொஹபத் கா ஷர்பத்

மொஹபத் கா ஷர்பத் வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பிரபலமான பானமாகும். இது மிகவும் பிரபலமானது மற்றும் தெரு உணவு விற்பனையாளர்களால் விற்கப்படுகிறது, குறிப்பாக கோடை மற்றும் ரமலான் காலங்களில் விற்கப்படும்.

"மொஹபத் கா ஷர்பத்" என்பது இந்தி/உருது வாக்கியமாகும், இதன் பொருள் ஆங்கிலத்தில் "காதல் பானம்".

தேவையான பொருட்கள் :

குளிர்ந்த பால் - 1/2 லிட்டர்

தர்பூசணி துண்டுகள் - 3 கப்

பொடித்த சர்க்கரை - 1/4 கப்

ரோஸ் சிரப் - 4 டீஸ்பூன்

ஐஸ் க்யூப்ஸ் - 2 ட்ரே

செய்முறை :

காய்ச்சாத தண்ணிர் சேர்க்காத பாலை ஒரு கிண்ணத்தில் உற்றி. இதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

பிறகு ரூஹ் ஹஃப்ஜா (அ) ரோஸ் சிரப் சேர்த்து கலக்கவும்.

அதன்பின் தர்பூசணித் துண்டுகள் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து கலக்கவும்.

முற்றிலும் புதுமையான சுவையில் மொஹபத் கா ஷர்பத் தயார்.

Tags

Next Story