நாவிற்கு சுவையான மீன் வறுவல்மசாலா பொடி

நாவிற்கு சுவையான மீன் வறுவல்மசாலா பொடி

 மீன் வறுவல்மசாலா பொடி

மீன் வறுக்க மிக்ஸிங் செய்யும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இந்த மசாலாவைக் கலந்து மீனில் தடவி ஊற வைத்து வறுத்தால் சுவையாக இருக்கும்.

மீன் வறுவலின் சுவையே அதன் மசாலா மிக்ஸிங்கில்தான் உள்ளது. எனவே அதன் சுவையை அசத்தலாக்கும் வகையில் வீட்டிலேயே எப்படி மீன் வறுவல் மசாலா பொடி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தனியா - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2 கப்

மிளகு - 1/2 கப்

சீரகம் - 10 கிராம்

சோம்பு - 10 கிராம்

கிராம்பு - 10 கிராம்

வெந்தயம் - 5 கிராம்

கடுகு - 5 கிராம்

மஞ்சள் கட்டி - 3

செய்முறை :

கடாய்வைத்து எண்ணெய் ஊற்றாமல் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, கிராம்பு, வெந்தயம் , கடுகு மற்றும் மஞ்சள்கட்டி என அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல் தனியாவை சூடேறும் வகையில் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும் .

பின் அதை சூடு போக ஆற வைக்கவும். சூடு தனிந்ததும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் ஒரு தட்டில் சூடு போக காய வைத்து டப்பாவில் காற்று புகாமல் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்தால் 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும். அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

மீன் வறுக்க மிக்ஸிங் செய்யும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இந்த மசாலாவைக் கலந்து மீனில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வறுத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

Tags

Next Story