எச்சில் ஊரும் நெல்லித் துவையல் !

எச்சில் ஊரும் நெல்லித் துவையல் !

நெல்லித் துவையல் 

தேவையான பொருட்கள்:

முழுநெல்லி - 250 கிராம்

அல்லது நெல்லிசிப்ஸ் - 100 கிராம்

பூண்டு - 5 துண்டுகள்

இஞ்சி - 20 கிராம்

மிளகுத்தூள் - சிறிது

பிளாக்சால்ட் - சிறிது

தயாரிப்பு முறை:-

முழு நெல்லிகளைக் கழுவி வெட்டிக் கொட்டை நீக்கவும் நெல்லி சிப்ஸ் அல்லது நெல்லிமுள்ளி எனில் குறைந்த அளவு நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்

வெட்டிய அல்லது ஊறிய நெல்லிகளுடன் பூண்டு தோல் நீக்கிச் சேர்க்கவும் இஞ்சியையும் தோல்நீக்கிச் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும் அத்துடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சேர்க்கவும் அருமையான நெல்லித் துவையல் சாப்பிடத்தயார

இயற்கை இட்லி, அவல் தயிர்சாதம், மற்றும் பிற உணவு களுடன் இணைத்துச் சாப்பிடலாம் ஊறுகாய்க்குப் பதில் பயன் படுத்தலாம். பல பிணிகள் குறையும் நீரிழிவு அன்பர்கள் அவசியம் அடிக்கடி சாப்பிட வேண்டும். பசியின்மை, அஜீரணம் விலகும் இளமை மேம்படும் கண்ணாடி அணிந்த அன்பர்களும் தினமும் செய்து சாப்பிட வேண்டும்.

Tags

Next Story