மூக்கை துளைக்கும் முட்டைகோஸ் குழம்பு!

மூக்கை துளைக்கும் முட்டைகோஸ் குழம்பு!

முட்டைகோஸ் குழம்பு 

முட்டைகோஸ் வைத்து கூட்டு, பொறியல் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு முறை இப்படி முட்டைகோஸ் வைத்து குழம்பு செய்தால், அடிக்கடி நீங்களும் முட்டைகோஸ் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவுக்கு இந்த குழம்பு ருசியா இருக்கும். இதை எளிதாகவும் சுவையாகவும் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஏலக்காய் - 1

கிராம்பு -2

தக்காளி - 2

வெங்காயம் - 2

பட்டை - 1

முட்டைகோஸ் - அரை கிலோ

பச்சை மிளகாய் - 2

துவரம் பருப்பு - கால் கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி - கால் கப்

தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பையும் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

முதலில் வெங்காயம், தக்காளி முட்டைகோஸ், பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கிராம்பு, பட்டை, ஏலக்காயை நன்றாக பொடி செய்துகொள்ளவும்.

வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி செய்த வாசனை பொருட்களைப் போடவும். அடுத்ததாக பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்ட பிறகு முட்டைகோஸ் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அடுத்ததாக வேகவைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி லேசாக கொதி வந்ததும் இறக்கினால் சூடான சுவையான முட்டைகோஸ் குழம்பு ரெடி.

Tags

Next Story