மூக்கை துளைக்கும்... முட்டை சட்டினி..!

மூக்கை துளைக்கும்... முட்டை சட்டினி..!

முட்டை சட்டினி

டிஃபரண்டா செஞ்சு டிபன் பாக்ஸை காலி பண்ணுங்க.படா பட்டுன்னு, சடார் சட்டுனு பத்தே நிமிசத்துல ரெடியாகும். இட்லி ,தோசை, பரோட்டா- வுக்கு பொருத்தமான முட்டை சட்னி எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் .

தேவையான பொருட்கள்:

முட்டை -4

பெரிய வெங்காயம்-2gg

தக்காளி-4

பச்சை மிளகாய்-2

எண்ணெய்-100 ml

சிக்கன் மசாலா-1டேபிள் ஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள்-1/4 டேபிள் ஸ்பூன்

மிளகு-காரத்திற்கேற்ப

கருவேப்பிலை -2கொத்து

உப்பு-தேவையான அளவு

மஞ்சள் தூள்-1/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய்யை ஊற்றவும் . எண்ணெய் சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும். மேலே குறிப்பிட்ட அளவில் சிக்கன் மசாலா, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.அதனுடன் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இப்போது முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி விடவும் .கிரேவி பதத்திற்கு வந்ததும் தேவையான பெப்பர் சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் மூக்கை துளைக்கும் மணமான முட்டை சட்னி தயார். சப்பாத்தி, பரோட்டா, இட்லியுடன் சேர்த்து சாப்பிட புதுவித சுவையாக இருக்கும்

Tags

Next Story