சத்து நிறைந்த காரட் கீர் - ஈசியா செய்யலாம் வாங்க !!!

சத்து நிறைந்த காரட் கீர் - ஈசியா செய்யலாம் வாங்க !!!

காரட் கீர்

காரட் கீர் கண்ணாடி அணிந்த அன்பர்கள் மாலைகள் பணியாளர்கள் அடிக்கடி அவசியம் சாப்பிட வேண்டிய பானம். பள்ளி சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் சாப்பிடும் பானம் இயற்கை நல வாழ்வு முகாமில் காரட் கீர் எல்லோரும் விரும்பும் உணவு கடின மலச்சிக்கலை நீக்கும் குடல்பும் வயிற்றுப்புண் நண்பர்கள் நலம் பெறுவர் தொடர்ந்து காரட் கீர் அருந்தினால் புற்றுநோயும் குணமாகும். முகம் பொலிவு பெறும் இளமை மேம்படும் ஆரோக்கிய அதிசய டானிக் உணவு மாலைக்கண் வியாதி அன்பர்கள் தினமும் காரட் கீர் கண்டிப்பாக அருந்த வேண்டும். இது ரத்தம் ஊறி உடலில் புத்துணர்ச்சி பெரும். வாழும் காலம் எல்லாம் காரட் கீர் சாப்பிட தயக்கம் கூடாது. உலகின் ஒரு கோடியில் உள்ள கப்பேத்தியா மலை கிராமத்தில் இன்றும் காரட்டை மட்டுமே பெரும்பான்மை உணவாக இயற்கையாக சாப்பிடுகின்றனர். காரட்டில் உள்ள கால்சியம் கரோட்டினும் எளிதில் விரைந்து ஜீரணிப்பதுடன் விட்டமின் "ஏ" வாக மாறி கல்லீரலில் சேமிப்பாக மாறுகிறது. தினமும் ஒரு காரட் கீர் குடித்து பல பிணிகளை உறுதியாக குறைத்திடலாம். கண்களை அருமையாய் காத்திடலாம்.


தேவையான பொருட்கள் :

காரட் - 500 கிராம்

தேங்காய் துருவல் - 2 மூடிகள்

பேரிச்சை அல்லது தேன் அல்லது வெல்லம் தூள் - 200 கிராம்

ஏலம் தூள் - சிறிது

செய்முறை :

காரட்டுகளை கழுவி துருவல் செய்து மிக்ஸியில் அரைத்து நீர் சேர்த்து வடிகட்டி சாறு எடுக்கவும் பின்பு தேங்காய் துருவலை அரைத்து வடிகட்டி தேங்காய்ப்பால் எடுக்கவும் பேரிச்சை சேர்த்தால் கொட்டைகளை நீக்கி அதை சாறு எடுத்து, காரட் சாறு தேங்காய்ப்பால் பேரிச்சை சாறு அல்லது தேன் ஏலம் தூள் அனைத்தையும் கலந்தால் காரட் கீர் சுவைத்திட ரெடி ரோஸ் கீர் போல் மிகவும் கவர்ச்சியான சத்தான பானம். இந்த சத்து நிறைந்த காரட் கீர் குடித்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வோம்.



Tags

Next Story