வெண்டைக்காய் சுண்டல் குழம்பு

வெண்டைக்காய் சுண்டல் குழம்பு

வெண்டைக்காய் சுண்டல் குழம்பு

வெண்டைக்காயுடன் சுண்டலா ? அப்டின்னு நினைக்கிரிங்களா.. ஆமாங்க.

வித்தியாசமான அட்டகாசமான இந்த டிஷ்ஷா நீங்க ட்ரை பண்ணி அசத்துங்க .

நிச்சயமா உங்களுக்கும் உங்கவீட்டுல எல்லாருக்கும் பிடிக்கும்.வாங்க எப்டி செய்யுறதுன்னு பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய்-1/2கிலோ

வேகவைத்த கருப்பு சுண்டல்-1 கப்

பெரிய வெங்காயம்-4

கறிவேப்பிலை- 2 கொத்து

கொத்தமல்லி தழை-கைப்பிடி அளவு

கல் உப்பு-தேவையான அளவு

மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்

மல்லித்தூள்-2 ஸ்பூன்

சீரகத்தூள்-1 ஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் -2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா தூள்-1/2 ஸ்பூன்

மிளகுத்தூள்-1/4 ஸ்பூன்

நல்லெண்ணெய்-1/2 கப்

கடுகு-1 ஸ்பூன்

சீரகம்-1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 ஸ்பூன்

வெல்லம்-1 ஸ்பூன்

மசாலா அரைக்க:

சின்ன வெங்காயம்-150கிராம்

தேங்காய் துருவல்-1 மூடி

தக்காளி-6

சோம்பு-1 ஸ்பூன்

கசகசா-1 ஸ்பூன்

வெந்தயம்-1/4 ஸ்பூன்

பூண்டு-10 பல்

இஞ்சி-சிறியதுண்டு

கறிவேப்பிலை-2 கொத்து

சிறிதுஎண்ணெய்

செய்முறை :

முதலில் மசாலா அரைக்க தேவையான பொருட்களை வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு

அரைத்து எடுக்கவும். பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெண்டைக்காய்

சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும் .பின் மீண்டும் எண்ணெய் விட்டு சூடானதும்

கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்

மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் குழம்பு

மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

பின் வேகவைத்த சுண்டல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு பச்சை வாசனை போக நன்றாக கொதித்ததும் வெண்டைக்காய் சேர்த்து வெல்லம் பெருங்காயத்தூள்

கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும் வெண்டைக்காய்

சேர்த்த பின் அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். சுவையான ஆரோக்கியமான வெண்டைக்காய் சுண்டல் குழம்பு ரெடி

Tags

Next Story