நம்ம ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா ரெசிபி !!

நம்ம ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா  ரெசிபி !!

பன்னீர் டிக்கா மசாலா

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 100 கிராம்

தயிர் - 2 கப்

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்

மல்லித்தூள் - 4ஸ்பூன்

கரம் மசாலா -4ஸ்பூன்

பிரியாணி செலவு

மிளகுத்தூள் - சிறிதளவு

இஞ்சி,பூண்டு பேஸ்ட் - சிறிதளவு

எலுமிச்சை சாறு - அரை பழம்

பெ.வெங்காயம் - 1/4 கி

தக்காளி - 4

பட்டர் - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட இரண்டு கப் தயிரில் சிறிதளவு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,ஒரு ஸ்பூன் மல்லி தூள் ,இரண்டு ஸ்பூன் கரம் மசாலா, இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்ஸ் செய்து வெங்காயத்தை குடைமிளகாய் போல் ஏடு ஏடாக எடுத்து அதனுடன் நறுக்கிய பன்னீரையும் சேர்த்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு ஸ்டிக்கில் ஒரு வெங்காயம் ஒரு பன்னீர் என சொருகி தோசை கல்லில் சிறிதளவு பட்டரை சேர்த்து அதில் அந்த ஸ்டிக்கை வைத்து பன்னீர் டிக்காவை தயாரித்துக் கொள்ளவும். பின்னர் மசாலா செய்ய ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பட்டரை சேர்த்து பிரியாணி செலவு சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து அரைத்து வைத்த தக்காளி சாரையும் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வைக்கவும். முன்னதாக பன்னீர் டிக்கா செய்து மீதமுள்ள மசாலாவையும் இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும் கடைசியாக ரெடியாக உள்ள பன்னீர் டிக்காவை அதனுடன் போட்டு சிறிதளவு கொத்தமல்லியையும் சேர்த்தால் பன்னீர் டிக்கா மசாலா ரெடி.

Tags

Read MoreRead Less
Next Story