வேர்கடலை லட்டு... எப்படி செய்யலாம் பாக்கலாம்!

வேர்கடலை லட்டு... எப்படி செய்யலாம் பாக்கலாம்!

வேர்கடலை லட்டு

(ஐந்து நபர்களுக்கு) தேவையான பொருட்கள்

வறுத்த வேர்கடலை - 300 கிராம்

பொட்டுக்கடலை - 150 கிராம்

பேரீட்சை - 300 கிராம் (கொட்டை நீக்கியது)

(அல்லது) வெல்லம்தூள் - 300 கிராம்

உலர்திராட்சை - 100 கிராம்

முந்திரி - 50 கிராம்

ஏலம்தூள் - சிறிது

தயாரிப்பு முறை:

வேர்கடலை லட்டு குறைந்த செலவில் தயாரிக்கலாம் பேரீட்சையை கொட்டையைநீக்கி, பேரீட்சையையும், உலர் திராசையையும் கழுவிக் கொள்ளவும். வேர்கடலையை தோல்நீக்கி எடுத்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலையை சுத்தம் செய்து கொள்ளலாம்.

வறுத்த வேர்கடலை, பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, அத்துடன் பேரீட்சை, உலர் திராட்சையும் 'சேர்த்து அரைத்து அத்துடன் சூட்டோடு ஏலம்தூள், முந்திரிப்பருப்பை முழுதாகப் போட்டுக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து விடவும். உருண்டையாக் பிடிப்பதில் தேவை எனில் சிறிது தேன், அல்லது நெய் கலக்கலாம்.

மாலை டிபன் நேரங்களிலும், பயண காலங்களிலும், விருந்தினர்கள் வரவேற்பிலும் பயன்படுத்தலாம். பள்ளிச் செல்லும் அன்பர்கள், கடின உழைப்பாளிகளுக்கு ஏற்ற தெம்பு தரும் அற்புத உணவு. குறைந்த செலவில் தயார் செய்யலாம். மழைக் காலங்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம். அதிக கலோரி சக்தியைத்தரும் உணவு. நரம்புகளுக்கு ஊக்கம் தரும் உன்னத உணவு.

எண்ணைய் வித்துக்களில் எள் தான் முதன்மையான உணவு, அதையும் அப்படியே பயன்படுத்தும் சமயம் நல்ல தெம்பும், வெப்பசக்தி, தேவையான கலோரி தரும். நல்ல பசி தாங்கும் உணவு. மலச்சிக்கல் நீக்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க அடிக்கடி இவ்உருண்டைகளையோ அல்லது முளைத்த எள்ளையோ பயன் படுத்தலாம். அல்லது முளை எள் பால் தயாரித்தும் சாப்பிடலாம்.

Tags

Next Story