பொட்டேட்டோ சீஸி பால்ஸ் !!

பொட்டேட்டோ சீஸி பால்ஸ் !!

பொட்டேட்டோ சீஸி பால்ஸ்

தேவையான பொருட்கள் :

வேக வைத்த உருளைக்கிழங்கு - 3

பன்னீர் - 100 கிராம்

மைதா மாவு - 3 டீஸ்பூன்

கார்ன் பிளவர் மாவு - 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி (விரும்பினால் மட்டும்) - 1

உப்பு - தேவையானஅளவு

பொரிக்க எண்ணெய் - தேவையானஅளவு

பொடியாக நறுக்கிய கேரட் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்

தேவையானஅளவு சீஸ் ஸ்பெர்ட்(cheese spread)

செய்முறை :

முதலில் முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்துள்ள பன்னீர் சிறிதாக நறுக்கி வைக்கவும். ஒரு பவுலில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மைதா மாவு கான்பிளவர் மாவு நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் தக்காளி தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் பொடியாக நறுக்கிய பன்னீர் அனைத்தும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் தேவைப்படின் மட்டும் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.கையில் சிறிதளவு எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இப்பொழுது பொரிக்கத் தேவையான பன்னீர் உருண்டைகள் தயாராக உள்ளது. அதை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்பொழுது சுவையான சுலபமான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

Tags

Read MoreRead Less
Next Story